Skip to main content

சுட்டெரிக்கும் வெயில்; மீண்டும் தள்ளிப் போகும் பள்ளிகள் திறப்பு?

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

opening schools is likely to be delayed due to the high impact of heat in Tamil Nadu

 

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தது. அதே சமயம், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து  வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு மேலும் சில நாட்கள் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்