Published on 21/12/2019 | Edited on 21/12/2019
தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஆனால் அவருக்கு அந்த துணைவேந்தர் பதவிக்கான தகுதி இல்லை.
இந்த நியமனம் விதி முறைகளை மீறி நடந்துள்ளது. எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேலுமணி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் சரியான தகுதி இல்லாதிருந்தும் விதியை மீறி நியமன செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.