Published on 03/07/2022 | Edited on 03/07/2022

கடலூரில் ஏரியில் குளிக்க சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது திருமலை அகரம் கிராமம். இந்த கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவிற்காக பாட்டி வீட்டிற்கு 17 வயதான முத்துலட்சுமி அவரது சகோதரியான சிவசக்தி வந்திருந்த நிலையில், நேற்று மாலை அங்கிருந்த ஏரி பகுதியில் இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்பொழுது நீச்சல் தெரியாத இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கிய சகோதரிகள் இருவரும் உயிரிழந்தனர். இன்று இருவரது உடலும் மிதந்த நிலையில் இருவரது சடலங்களையும் உறவினர்கள் மீட்டனர். நீச்சல் தெரியாததால் சகோதரிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.