![RAJINI](http://image.nakkheeran.in/cdn/farfuture/NZWScIokVMU4m5MqK191IR1D_PspWYXqkVg99atZQpY/1545564266/sites/default/files/inline-images/RJI.jpg)
கட்சி ஆரம்பித்த பிறகு களப்பணியில் ஈடுபட இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஓய்விற்காக குடும்பத்ததுடன் அமெரிக்கா செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த் நேற்று குடும்பத்துடன் சென்னை விமானநிலையம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர் .
அப்போது பேசுகையில்,
புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த பதிலை ஏற்கனவே பலமுறை அறிவித்துள்ளதாக கூறிய அவர், கூட்டணி பற்றிய கேள்விக்கு இன்னும் அரசியல் கட்சியே ஆரம்பிக்க வில்லை எனவே கட்சி ஆரம்பித்த பிறகுதான் கூட்டணி பற்றி பேசப்படும் என கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரடியாக மக்களை சந்திக்கவில்லை ஏன்? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இன்னும் கட்சியே ஆரம்பிக்க வில்லை எனவே ஆரம்பித்ததற்கு பிறகு களப்பணிகளில் ஈடுபடுவோம் என கூறினார்.