பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ஆனால் வீட்டுக்கு வந்தபாம்பை பிடித்து பாதுகாப்பாய் காட்டுக்குள் விட்ட கோவை சேர்ந்த தந்தை - மகள்.
கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் தமிழீழம். சாந்தகுமார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அந்த பாம்பை அடிப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இதனை பார்த்த சாந்தகுமாரின் மகள் பாம்பை அடிக்க வேண்டாம் என்று கூறி அடம்பிடித்து அவரது சந்தை சாந்த குமாருடன் சேர்ந்து அந்த பாம்பை மீட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டுள்ளார். இந்த பாம்பானது சுமார் 6 அடி நீளமுள்ள கருப்பு நிற சாரைப்பாம்பு ஆகும். பாம்பு என்றால் படையே நடுங்கும் ஆனால் பாம்பைக் கண்டதும் தனது தந்தையிடம் போராடி அந்த பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட மகளை அனைவரும் பாராட்டினர்.