Skip to main content

நளினிக்கு ஒரு மாதம் பரோல்... நீதிமன்றம் உத்தரவு!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

nalini


மேலும் இவ்வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதாட அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் ஜீலை 5-ம் தேதி நேரில் ஆஜராகலாம் என கடந்த 25-ம் தேதி நீதிபதி அனுமதியளித்திருந்தார். இதையடுத்து இன்று வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். 

நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து ஒரு முறைக்கு 30 நாட்கள்தான் பரோல் வழங்கமுடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து ஊடங்களை சந்திக்க கூடாது போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஒரு மாதம்(30)நாட்கள் பரோல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்