Published on 29/08/2022 | Edited on 29/08/2022
![ரகத](http://image.nakkheeran.in/cdn/farfuture/v5Bd9jGeZamcZwtUD7-awxijyoCJA02pC20jf5DZtzk/1661775650/sites/default/files/inline-images/kl%3B%27_3.jpg)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 17- ஆம் தேதி சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றே சென்னை மாவட்டத்துக்கும் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.