Published on 26/10/2021 | Edited on 26/10/2021
![Northeast monsoon - Chief Minister consults with district collectors today!](http://image.nakkheeran.in/cdn/farfuture/udtUJ9PLnVeZObLPb8cb5yj6Maw1KCHFmrhCmKsa5dc/1635221017/sites/default/files/inline-images/vaccinated33333_0.jpg)
வடகிழக்கு பருவமழை தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26/10/2021) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26/10/2021) காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெ. சைலேந்திரபாபு, சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நோய்த் தடுப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.