இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் , வெள்ளி பொருட்கள் மற்றும் மற்ற பொருட்கள் தொடர்பான விவரங்களை மாநிலங்கள் வாரியாக தினமும் வெளியிட்டு வருகிறது. இதன் படி நேற்று (27/03/2019) தமிழகத்தில் சுமார் 121.628 கோடி மதிப்புடைய கணக்கில்வராத பணம் மற்றும் தங்கம் ,வெள்ளி உட்பட பல பொருட்கள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் நடத்திவரும் சோதனையில் அதிகப்பட்ச பறிமுதலில் தமிழகம் தொடர்ந்து வருகிறது. இரண்டாமிடத்தில் உத்தர பிரதேசம் சுமார் 112.66 கோடி மதிப்புடைய பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மூன்றாம் இடத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சுமார் 110.43 கோடி மதிப்புடைய பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே ஆந்திர மாநிலத்தில் தான் அதிகபட்சமாக சுமார் 62.29 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு சுமார் 613.176 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே போல் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் பறிமுதல் செய்யப்படாத மாநிலங்கள் டெல்லி , ஜம்மு & காஷ்மீர் , லட்சத்தீவு உள்ளிட்ட இடங்களில் சோதனையின் போது ஒரு ரூபாய் கூட சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பி .சந்தோஷ் , சேலம் .