Skip to main content

நித்தியானந்தா வர வேண்டும்: மதுரை ஆதின மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி

Published on 20/09/2017 | Edited on 20/09/2017

நித்தியானந்தா வர வேண்டும்: மதுரை ஆதின மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேட்டி



மதுரை ஆதினம் மடத்திற்கு நித்தியானந்தா வர வேண்டும் என மதுரை ஆதின மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் சோலைக் கண்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மதுரை ஆதின மடத்தில் 292வது மகா சன்னிதானமாக இருப்பவர் ஆதினம். இவருக்கு அடுத்தபடியாக 293வது ஆதினமாக இப்போது இருப்பவர் திருநாவுக்கரசர். இவர் தனது மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் இந்த மடத்தில் வசித்து வருகிறார். தற்போது வைஷ்ணவி இங்கு அடிக்கடி வந்து செல்கிறார்.

நித்தியானந்தா கடந்த 2012ல் நாங்கள் தான் இங்கு தவறு நடக்கிறது என்று சுட்டி காட்டினோம். இப்போது இருக்கும் நிலைமையை பார்த்தால் இப்போது இருப்பவர்களுக்கு நித்தியானந்தா பரவாயில்லை. ஆகையால் தமிழகத்தில் மதத்திற்கு எதிரான செயல்கள் நடக்கும் போது மதுரை ஆதினம் குரல் கொடுப்பதில்லை. ஆளும் கட்சி அதிமுகவின் முன்னணி பேச்சாளராகவும் கைக்கூலியாகவும் மாறிவிட்டர். நித்தியானந்தா இங்கு மதுரை மடத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று என்னி அவரை விரைவில் சந்திக்க அனுமதி பெற்றுள்ளோம். சந்தித்த பிறகு இந்த ஆதின மடத்தில் நிறைய மாற்றங்கள் கிடைக்கும். தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவரும், மதுரை ஆதின மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சோலைக் கண்ணன் கூறுகிறார்.

ஷாகுல்

சார்ந்த செய்திகள்