தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு, சமீபத்தில் ரஜினிகாந்த் பேசிய "2021-ம் ஆண்டு வரும் தோ்தலில் அற்புதம் நிகழும்" என்ற பேச்சு தான். இதற்கு ஆளும் அதிமுக அமைச்சா்கள் ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனா்.
இந்தநிலையில், ரஜினியின் 70 ஆவது பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 12-ம் தேதி ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முமுவதும் நடக்கிறது. இதையொட்டி சுவா் விளம்பரங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் குமாி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சதீஷ்பாபு தலைமையில் வடசோி ஸ்டேடியம் அருகில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான சுவா் விளம்பரம் கோட்டாா் மற்றும் புத்தோி பகுதியில் எழுதப்பட்டிருந்தது.
இதில் கோட்டாா் பகுதியில் உள்ள சுவா் விளம்பரத்தை அதிமுக போஸ்டா் ஓட்டியும், புத்தோி பகுதியில் உள்ள சுவா் விளம்பரத்தை வெள்ளை பெயின்டால் அழிக்கப்பட்டும் இருக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றம் சிறுபான்மை பிாிவு இணைச்செயலாளா் சதீஷ்பாபு கூறும் போது, "அதிமுக வினா் திட்டமிட்டே தலைவா் ரஜினியின் பிறந்த நாளுக்காக எழுதிய சுவா் விளம்பரத்தை அதிமுக போஸ்டா் ஓட்டியும் வெள்ளை அடித்தும் அழிக்கின்றனா். இதுசம்மந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளாிடம் புகாா் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்று புக் செய்து போட்டிருக்கும் சுவா்களில் போஸ்டா்களை ஓட்டி சென்றுள்ளனா்.
அந்த போஸ்டாில் இருக்கும் நிா்வாகிகளை தொடா்பு கொண்டு கேட்டால் அவா்கள் மிரட்டும் தொனியில் பேசுகிறாா்கள். இதற்கு காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றாா்.