Skip to main content

நீலகிரி மழை: பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அமைச்சர்கள் ஆறுதல்! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Nilgiri rains: Ministers met the affected people and consoled them!

 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால், பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்து அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை ஊட்டி, தலையாட்டி மந்து பகுதியில் உள்ள, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறினர். மேலும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 

மேலும் ஊட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான, நா.கார்த்திக் வழக்கறிஞர். ஏ.பி.நாகராஜன், தணிக்கை ராஜேந்திரன், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்து பணியாற்றினார்கள். கன மழையால் பாதிக்கப்படுகிற நீலகிரி மாவட்ட மக்களுக்கு அமைச்சர்கள் களத்தில் இருந்து பணிபுரிவது அம்மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்