Skip to main content

எஸ்.பி.ஐ. சார்பில் ‘காவல் கரங்கள்’ அமைப்புக்கு புதிய ஆம்புலன்ஸ்..! (படங்கள்) 

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

சென்னை காவல்துறையில், ‘காவல் கரங்கள்’ எனும் அமைப்பு கடந்த 21.4.2021 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு, சென்னை பெருநகர் காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களிலும், சாலைகளிலும் வசிக்கும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மீட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்து, தனியார் மற்றும் அரசு காப்பகங்களில் சேர்த்துவருகிறது. அதேபோல், சிலரை குடும்பத்தினருடனும் சேர்த்துவருகிறது. இதற்காக, எஸ்.பி.ஐ. வங்கி புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை காவல் கரங்கள் அமைப்புக்கு இன்று (12.10.2021) வழங்கியது. இதனை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காக்கும் கரங்கள் சேவை பணிக்கு வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்