Skip to main content

நக்கீரன் ஆசிரியருக்கு சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான விருது

Published on 19/08/2022 | Edited on 19/08/2022
nakkheeran editor get iconic of bravely and investigative journalism award

 

இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சியில் துணிச்சல், சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான (iconic of bravely and best investigative journalism) விருதை நக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். 

 

சென்னை கிண்டியில் நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக  இந்தியன் விருதுகள் 2022 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு, பிஜோர்ன், ஷ்ருதிகா, அக்ஷரா ரெட்டி, மாளவிகா ஜெயராம், ரம்யா பாண்டியன், ரோபோ சங்கர், செமன், பார்வதி நாயர், ஷிரின் காஞ்ச்வாலா, ஷிவானி ராஜசேகர், சஞ்சிதா ஷெட்டி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இவ்விழாவில் துணிச்சல், சிறந்த புலனாய்வு பத்திரிகைக்கான (iconic of bravely and best investigative journalism) விருதை நக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார். இதே போன்று சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது புதிய தலைமுறை கார்த்திகைச்செல்வனுக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த திரைப்படத்திற்கான விருது இரவின் நிழல் படத்திற்காக இயக்குநர் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்