Skip to main content

அரை நிர்வாணமாக பேருந்தின் முன் விழுந்து ரகளை செய்த நபரால் பரபரப்பு

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
 The man who fell half-naked in front of the bus caused a stir

சென்னை அண்ணா சாலை பகுதியில் பேருந்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்ட நபர் திடீரென ஆடைகளை கழட்டி அரை நிர்வாணமாக பேருந்துக்கு முன்பு படுத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை அண்ணா சாலை போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வருபவர் ஆனந்தராஜ். இன்று காலை அண்ணா சாலை பகுதியில் பணியில் இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மாநகர் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளார். இதைப்பார்த்த போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் பைக்கில் வந்த அந்த நபரை ஓரமாகச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார். பேருந்து ஓட்டுநரும் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் காவலர் ஆனந்தராஜை சட்டையை பிடித்து கன்னத்தில் தாக்கினார். அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஆனந்தராஜை மீட்டனர். அந்த நபரை பிடிக்க முயன்ற பொழுது ஆடைகளை கழட்டி அந்த நபர் அரை நிர்வாணத்துடன் கீழே கொண்டு படுத்து உருண்டுள்ளார். பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்த போலீசார் அண்ணா சாலை அண்ணா சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்