Skip to main content

பூரான் விழுந்த உணவு; மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

Nagapattinam medical college students food issue

 

நாகப்பட்டினம் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவிகள் செவிலியர் பயிற்சி பள்ளியிலேயே தங்கி படித்து வருகின்றனர். மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக தோசை மற்றும் சாம்பார் வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். 

 

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவை சோதித்த பொழுது சாம்பாரில் பூரான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவில் மாணவிகள் சாப்பிட்ட உணவில் பூரான் கடந்ததால் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்