![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/Se0-7nmxOamR6alnZCWeeQ1r1riFzZqS5ioAmwisFeU/1607579763/sites/default/files/2020-12/th-5_1.jpg)
![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/xZcm6lfMLvc5ytTEd8Bar2aDxGll-N_Qk7EEBI-uixs/1607579763/sites/default/files/2020-12/th-3_6.jpg)
![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/ByqAmI3GJyU0fGPBZHPi8B8ftYTFznkjK9Rw8cCKL5M/1607579763/sites/default/files/2020-12/th-4_8.jpg)
![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/cxoVdunr-NUX2waQP_lMojsi_rZb1lAxkLKlqSxf9ec/1607579763/sites/default/files/2020-12/th-2_19.jpg)
![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/nUuOAT6O56wuueBoYBgmLy6IU0ZGtfxniJpFiQrXdfc/1607579763/sites/default/files/2020-12/th-1_18.jpg)
![MS Nagar people koovam saying that the alternative place is far away](http://image.nakkheeran.in/cdn/farfuture/taagwgzob0DNm0d__W7iePLnNNcT5-cHPa3K0doTRTg/1607579763/sites/default/files/2020-12/th_16.jpg)
Published on 10/12/2020 | Edited on 10/12/2020
சென்னை தீவுத்திடல் அருகே உள்ள எஸ்.எம் நகர் கூவம் பகுதியில் உள்ள வீடுகளை இடிப்பதற்கு ஏதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கூவத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். கூவம் ஆறு சீரமைப்பக்கவும் ஆற்றின் ஓரம் இருக்கும் குடிசைகளை அகற்றவும் நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வந்திருந்தனர். எஸ்.எம்.நகர் மக்களுக்கு அரசு சார்பில் பெரும்பாக்கம் பகுதியில் மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அது வெகு தொலைவாக இருப்பதாக தெரிவித்தும் அதற்கு மாறாக வியாசர்பாடி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் மாற்று இடம் வழங்கவேண்டும் என்று தெரிவித்து கூவத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் குறித்து அறிந்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.