![minister kp anbalagan pressmeet anna university](http://image.nakkheeran.in/cdn/farfuture/VurEvoRhdv40XVI0mY4wB6XH7tV9p86Dr-df_EC5JcU/1602826504/sites/default/files/inline-images/minister%20%281%29.jpg)
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், "அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்புள்ளது. வெளி மாநில மாணவர்களும் அதிக அளவில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை." இவ்வாறு அமைச்சர் கூறினார்.