Published on 08/08/2020 | Edited on 08/08/2020
![Mettur dam water level increased by 45 thousand cubic feet !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/-epEj8wJdPMedwIgbD-JP5o7tX6nYTmtXvdhzt-sDZE/1596858014/sites/default/files/inline-images/zdczzczc_0.jpg)
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக கபினி, கே.எஸ்.ஆர். அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது. காவிரியில் தற்பொழுது ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 316 கனஅடி நீர் திறக்கப்படுகிறது, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், தற்போது மேட்டூர் அணையில் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியிலிருந்து 45 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து மொத்த நீர்மட்டம் 75 அடியாக உள்ளது.