![Metro train service till 12.00 noon on Nov. 2 and 3!](http://image.nakkheeran.in/cdn/farfuture/WFp10vzlZtky-v0ZrvMPm9975w9QWUcytQf5F4wzwrM/1635751036/sites/default/files/inline-images/METRO%20RAIL_3.jpg)
மெட்ரோ ரயில் சேவை தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (01/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தீபாவளியை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (02/11/2021) மற்றும் நாளை மறுநாள் (03/11/2021) நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டுவரும் மெட்ரோ ரயில் சேவைகள், நாளை (02/11/2021) மற்றும் நாளை மறுநாள் (03/11/2021) மட்டும் இரவு 10.00 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை (02/11/2021) மற்றும் நாளை மறுநாள் (03/11/2021) இரவு 11.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் நாளை (02/11/2021) மற்றும் நாளை மறுநாள் (03/11/2021) மட்டுமே" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.