Published on 27/02/2024 | Edited on 27/02/2024
![Madurai, Sivagangai Police S.P. Transferred!](http://image.nakkheeran.in/cdn/farfuture/9Ekidv7syKgXHhAvz_b1VgkNwys3JgGPTtcwfsIF8zg/1709049947/sites/default/files/inline-images/ips-art_1.jpg)
தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.