Skip to main content

“என் காதலை பிரிச்சிட்டிங்க, இப்போ உங்களுக்கு சந்தோஷமா” எனக் கேட்டுவிட்டு தூக்கில் தொங்கிய இளம்பெண்!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020

 

madurai girl coimbatore boy love issue

 

மதுரை மாவட்டம், தேனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகளான 22 வயது நந்தினிக்கு, முகநூலில் கோவையைச் சேர்ந்த 20 வயது நிறைந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. 

 

பின்னர், அந்த இளைஞர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு செல்ஃபோன் நிறுவனத்தில், நந்தினிக்கு வேலை வாங்கி தந்திருக்கிறார். சேரன் மாநகரில் உள்ள பெண்கள் விடுதியில் அவர் தங்குவதற்கு அறையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

 

பின்னர் இருவரும் சந்திப்பதும், வெளியே சுற்றுவதாகவும் இருந்துள்ளனர். இது அந்த வாலிபரின் குடும்பத்திற்குத் தெரிய வந்தபோது, ஆமாம் என்னைவிட 2 வயது அதிகம் கொண்ட பெண்ணையே நான் காதலிக்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.


உடனே அவரின் பெற்றோர் நந்தினியின் பெற்றோரை சந்தித்து, “எங்க பையனைவிட உங்க பொண்ணுக்கு வயசு ஜாஸ்தி. அதுனால உங்கள் மகளை என் பையனிடம் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள்.” எனத் தெரிவித்துள்ளனர். 

 

இது நந்தினிக்குத் தெரிய வந்தபோது, தனது உறவினர் ஒருவருக்கு ஃபோன் செய்த நந்தினி, “எங்களது காதலைப் பிரிச்சிட்டிங்க, உங்களுக்கு சந்தோஷம் தானே.” என அழுதபடியே ஃபோனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 


இது பீளமேடு போலீஸுக்கு தெரியவர நந்தினியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். மேலும், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.