![lok sabha dmk mps speech union ministers](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ed1NyxAy07GaU9-IoLXcRtLaAQ-up2eojNRNpoBrHHI/1627046522/sites/default/files/inline-images/parlaiee.jpg)
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா தொடர்பாக தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், "ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மீது இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒளிப்பதிவு திருத்தச்சட்டம் மீதான பரிந்துரைகள் ஆலோசனை கட்டத்தில் மட்டுமே உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மக்களவையில் தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியம் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பிரவீன் பாரதி. "கரோனா மூன்றாவது அலை அச்சுறுத்ததால் நீட் மற்றும் பிற பொது நுழைவுத்தேர்வுகளை ஒத்தி வைக்கும் திட்டமில்லை. கலை&அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்" என விளக்கம் அளித்தார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12- ஆம் தேதி நீட் நுழைவுத்தேவு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, "நாட்டிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழகத்தில்தான் அதிகமான கரோனா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை 4,835.9டன் கரோனா மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் அகற்றப்பட்டுள்ளன. இரண்டாவது மாநிலமாக குஜராத்தில் 5,004.9 டன் கரோனா மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.