Skip to main content

குறைந்த பயணிகளே பேருந்து பயணம்!  ரயில் பயணிகளுக்கு முன் பரிசோதனை!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

கரோனா நோய்ப் பரவலை தடுப்பதற்காக கடந்த 7 மாதங்களாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. எட்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்குள் மட்டும் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து இயக்க அனுமதி அளித்தது.

 

அதையடுத்து இன்று முதல் கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம், நாகை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மட்டுமல்லாது சென்னை, திருச்சி, கோவை என தொலைதூர ஊர்களுக்கும், அண்டை மாநிலமான புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   

 

ஆனால், பொதுமக்கள் அதிகளவில் பேருந்தில் பயணம் செய்யாமல் குறைந்த அளவிலேயே பயணிகள் பேருந்தில் செல்கின்றனர். சமூக இடைவெளியுடனும், முகக் கவசங்கள் அணிந்து கொண்டும் பயணம் செய்து வருகின்றனர். அதேசமயம் தனியார் பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Ad

 

இதேபோல் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் வெப்பநிலை கண்டறியும் கருவிகள் கொண்டு, பரிசோதனை செய்த பின்னர்தான் உள்ளே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்