ஜிப்மர் மருத்துவமனையின் அறிக்கையின் படி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் கொலையோ, பாலியல் வன்கொடுமையோ அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் கூறியிருந்தது. இரண்டு பிரேத பரிசோதனைகளில் மருத்துவக்குழு எடுத்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஏற்றுக்கொள்கிறது எனவும் மாணவி எழுதியிருந்த கடிதத்தின் படி மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை என்றும் மாணவர்களை நன்றாக படிக்க சொல்வது ஆசிரியப் பணியில் அங்கமே தவிர தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும் உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.
மேலும் மூன்று பரிசோதனையின் முடிவிலும் ஒருமித்த கருத்துகள் இருப்பதாகவும், தற்கொலைக்கு தூண்டிய பிரிவில் இரு ஆசிரியைகளின் மீது வழக்கு பதிவு செய்தது தவறு என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கை விரைந்து முடிக்கவும் சி.பி.சி.ஐ.டிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.