




Published on 29/07/2021 | Edited on 29/07/2021
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது திமுக ஆட்சி செய்துவருகிறது. அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகளைக் கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என திமுகவினர் பிரச்சாரத்தில் தெரிவித்தனர்.
அவ்வாறு கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி அதிமுகவினர், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் நேற்று (28.07.2021) சென்னை பாண்டி பஜார் அருகே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.