Skip to main content

மாணவர்களே படியுங்கள் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னதுண்டா? ராமதாசுக்கு ஞானமூர்த்தி கேள்வி

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

 

குரு நினைவு மண்டப விழாவில் பேசிய ராமதாஸ் குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்து செந்துறை (வடக்கு) திமுக. ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 

mg



அதில், காடுவெட்டி குருவை கொலை செய்ய திமுக முயன்றது என ஒரு பெரும் பழியை சுமத்தியுள்ள மருத்துவர் அய்யாவே! உங்கள் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் நினைத்து பாருங்கள். வ. ச. பேச்சாளர் ஏழுமலை கொல்லப்பட்டது யாராலே? வல்லம் அறிவழகன் கொல்லப்பட்டது யாராலே? பெரியதத்தூர் வெங்கடேசன் கொல்லப்பட்டது யாராலே? இப்போது சட்ட அமைச்சராக இருக்கிறாரே சிவி சண்முகம் உறவினர் கொல்லப்பட்டது யாராலே? இன்றைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது யார்? அவர் மயிர் இழையில் உயிர் பிழைத்தது எப்படி?


 உடையார் பாளையம் வன்னிய அடிகளார் என்கிற யு. எஸ். இராமமூர்த்தி தாக்கப்பட்டது  யாராலே? பண்ருட்டி ராமச்சந்திரன் கார் தாக்கப்பட்டது யாராலே? ஏ கே நடராஜன் தாக்கப்பட்டது யாராலே? உங்களை உலகறியச் செய்த வாழப்பாடியாரை வஞ்சகத்தால் வீழ்த்தியது யாரய்யா? பேராசிரியர் தீரன் தாக்கப்பட்டது யாராலே? காட்டகரம் வேங்கைப்புலியன் தாக்கப்பட்டது யாராலே? விழுப்புரம் பாலசண்முகம் தாக்கப்பட்டது யாராலே? ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் இராமலிங்கம் தாக்கப்பட்டது யாராலே?...இப்படி வன்னியர்களை அழிக்கவே வன்னியர் சங்கமா?....பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 


 

ஒரு சாதியின் தலைவர் தன் சாதி மக்களையே அழித்தது எந்த சாதியில்? இன்றைக்கும் தன் சாதி இளைஞர்கள் படித்துவிடக்கூடாது, அவன் வாழ்க்கையை வளப்படுத்திவிடக்  கூடாது என்பதில் தந்தையும் , மகனும் தளராமல் சாதி வெறியை ஊட்டி வன்முறையாளர்களாகவே மாற்ற முயற்ச்சித்து வருவது அனைவருக்கும் தெரியும். 
 

உங்கள் கட்சி  அல்லது சங்கத்தின் மூலம் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இருக்கிறீர்களா? அப்படி நடத்தி இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்? 
 

எந்தக்கூட்டத்திலாவது வன்னிய இளைஞர்கள் குடிக்ககூடாது, குடிக்கின்ற இளைஞர்களுக்கு சங்கத்திலோ, கட்சியிலோ இடமில்லை என சொன்னதுண்டா? என்றைக்காவது மாணவர்களே, இளைஞர்களே முதலில் படியுங்கள், முன்னேறுங்கள் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னதுண்டா?
 

 சிறுவயதில் பேனாவை எடு எழுது, படி என சொல்வதை விட்டுவிட்டு வீச்சறிவாளையும் அதன் நுணியில் இரத்தம் சொட்டுவதைப்போலவும் படம் போட்டு டீ-சட் கொடுக்கிறீர்களே இதுவா சாதியை நல்வழிப்படுத்துவது. வன்னியர்களுக்கு அக்கினி குண்டம்தானே போடவேண்டும். வீச்சறிவாள் எதற்க்காக. இன்றைய இளைஞர்களை கொலைவழக்குகளில் தள்ளிவிடவா? 
 

விஞ்ஞானம், கணினி என வளர்ந்துவரும் இந்தக் காலத்தில், கற்கால காட்டுமிறாண்டி காலத்திற்கு இளைஞர்களை இட்டுச் செல்லலாமா? 10 வயது இருக்கும்போதே அவன் பிங்சு மனதில் சாதி வெறி என்னும் நஞ்சை ஊட்டி அவன் வாழ்க்கையையே இருண்ட சுடுகாடாக மற்றுவதுதான் மாற்றம்! முன்னேற்றமா? அன்புமணி. மத்தியில் மந்திரிகளாக இருந்தீர்களே எத்தனை வன்னிய இளைஞர்களுக்கு நீங்கள் வைத்திருந்த மருத்துவ இலாக்காவில் வேலை கொடுத்தீர்கள்? 
 

இரயில்வே துறை , சுரங்கத்துறை உங்கள் கையிலே இருந்ததே அந்த காலகட்டத்தில் வடநாட்டினர் தானே வேலையில் சேர்ந்தனர். நீங்கள் எத்தனை வன்னிய இளைஞர்களுக்கு 
வேலை கொடுத்தீர்கள். 
 

மத்திய சுகாதாரத்துறை உங்கள் மகன் அன்புமணி தானே வைத்திருந்தார் எத்தனை வன்னிய மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்டு இலவசமாக கொடுத்தார். உங்கள் கோட்டாவில் வந்த சீட்டைகூட காசுக்குதானே விற்றீர்கள். 


 

திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வன்னியர்களிடம் வசூல் செய்து கல்லூரி கட்டியிருக்கிறீர்களே அங்கே எத்தனை வன்னிய இளைஞர்கள் இலவசமாக படிக்கிறார்கள். எத்தனை வன்னியர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிரீர்கள். அந்தக்கல்லூரிக்கும் உங்கள் துணைவி சரஸ்வதி அம்மையாருக்கும் என்ன சம்பந்தம்.  கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைத்திருக்கிறீர்களே இதுதான் பொதுத் தொண்டா?
 

 தேர்தல் வந்தால் வன்னியர் ஓட்டு வேண்டும், பதவி வந்தால் வன்னியர் நோட்டு வேண்டும், இதுதான் உங்கள் தாரக தந்திரமா? அய்யா மருத்துவரே மல்லாந்து உமிழ வேண்டாம்! இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்