Skip to main content

'கடலூருக்கு மேலும் ஒரு அமைச்சர் நியமனம்'!- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

cyclone and heavy rains cuddalore district cm palanisamy appointed one more minister

கடலூர் மாவட்டத்தில் மழை, புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தை நியமித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புரெவி' புயலின் தாக்கத்தால் கடந்த 03/12/2020 முதல் 05/12/2020 வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் பெருமக்களுக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோரை கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிக பாதிப்பு இருப்பதால், சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மேற்கூறிய அமைச்சருடன் இணைந்து கடலூர் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்