Published on 20/06/2019 | Edited on 20/06/2019
கடந்த 14 - ந்தேதி இரவு புளிச்சமாவை வீசி கடைக்காரப் பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அப்பெண்ணின் கணவர் செல்வத்துக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமிடையே கைக்கலப்பு ஏற்பட்டது. அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் ஏ.எஸ்.பி. ஜவஹர் உத்தரவின்படி அதிரடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மளிகைக்கடைக்காரர் செல்வம். ஆனால், ஜெயமோகனின் அடாவடியால் பாதிக்கப்பட்ட கடைக்காரப் பெண்மணி கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நாகர்கோயில் நீதிமன்றம் செல்வத்திற்கு தற்போது ஜாமீன் வழங்கி விடுவித்திருக்கிறது.
![v](http://image.nakkheeran.in/cdn/farfuture/zfbO39u9nexachdUsg-OUT5nQDzoCF34HxLuYkl7R6A/1561036909/sites/default/files/inline-images/vasantham.jpg)
ஜெயமோகன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை நாட இருக்கிறார்கள் கடைக்காரர் குடும்பத்தாரும் வியாபாரிகள் சங்கத்தினரும்.