Skip to main content

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் மாவட்டங்கள் விவரம்

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

It will rain heavily in these districts for the next three hours!

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (18/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19/11/2021) காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்கும். திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும். 

 

அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்