Published on 19/09/2018 | Edited on 19/09/2018
![pon](http://image.nakkheeran.in/cdn/farfuture/a6w22iZcXTmqW5d7eMvKPKTOdJfRXHY5HcjmIb09CVA/1537382164/sites/default/files/inline-images/6_13.jpg)
தமிழிசை குழந்தையாக இருப்பதில் தவறில்லை என பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திமுக பொருளாளர் துரைமுருகன் தமிழிசை சவுந்தரராஜன் இன்னும் குழந்தையாகவே இருகிறார் என்று கூறிய விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழிசை குழந்தையாக இருப்பதில் தவறில்லை குழப்பவாதியாக இருந்தால்தான் தவறு எனக்கூறினார்.
மேலும், கிளி ஜோதிடமே பலிக்காமல் இருக்கும் பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கிளி ஜோசியத்தை படித்து விட்டு தமிழகத்தில் ஆட்சி களையும் என ஆருடம் கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பினார்.