Skip to main content

இபிஎஸ்க்கு சேலத்திலும், ஓபிஎஸ்க்கு பாளையங்கோட்டையிலும் சிறைச்சாலை தயார்-அமமுக வேட்பாளர் பகீர்

Published on 31/03/2019 | Edited on 31/03/2019

முதல்வருக்கு சேலத்திலும் துணைமுதல்வருக்கு பாளைங்கோட்டையில் ஓ.பி.எஸ்க்கு சிறைசாலை தயார் அமமுக வேட்பாளர் பகீர் ‘

 

பெரம்பலூர் அமமுக வேட்பாளர் தொட்டியம் ராஜசேகர் இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தமிழ்மாநில காங்கிரஸ் அடுத்த அதிமுக தற்போது அமமுக கட்சிக்கு மாறியவர். இவர் அந்த பகுதியில் பெரும்பான்மையாக உள்ள முத்திரையர் சமூகத்தை சேர்ந்தவர். ஏற்கனவே தொட்டியம் - முசிறி பகுதியில் செல்வாக்கான நபர் என்பதாலும் அதிமுக சார்பில் முசிறியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவபதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் அமமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

 

ammk

 

எப்போது சர்ச்சைகுரிய கருத்துகளை பொதுகூட்டங்களில் பேசுவதை வழக்கமாக கொண்டவர். 1 வருடத்திற்கு முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் ஜெயித்தோம் என்று ஊழியர் கூட்டத்தில் பேசியவர் பிறகு அடுத்த நாளே நான் அப்படி பேசவில்லை என்று மறுத்தார்.

 

இந்த முறை பெரம்பலூர் எம்.பி. தொகுதி வேட்பாளர் என்பதால் சமயபுரம் பகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தில் இவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்முக வேட்பாளர்  வெற்றி பெற்றால் ஓபிஎஸ்க்கு பாளையங்கோட்டை, இபிஎஸ்க்கு சேலம், வீரமணிக்கு வேலூர், வேலுமணிக்கு கோயமுத்தூர் சிறைச்சாலைகளை தயார்படுத்தி் வைத்துள்ளோம்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பேச்சு  திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.

 

 

 

இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் வேட்பாளர் ராஜசேகர் மேலும் பேசியதாவது..

 

 

திமுக அதிமுக போன்ற கட்சிகள் தேர்தல் தொடர்பான உறுப்பினர்களை மற்றும் பூத் கமிட்டி ஏஜெண்டுகளை நியமிக்கவில்லை ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு பூத் கமிட்டிக்கு 30 பேர் வீதம் அனைத்து தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்து உள்ளனர் ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் 10 வாக்குகள் சேர்த்தால் அந்த 10 வாக்குகளும் அம்மா அப்பா தங்கை அண்ணன் உள்ளிட்ட உறவினர்கள் என பத்து வாக்காளர்களை ஒரு பூத் கமிட்டி உறுப்பினர் சேர்த்தால் தொகுதிக்கு ஒரு லட்சம்  வாக்கு நமது கட்சிக்காரர்கள் உடைய வாக்கு பதிவாகும். 

 

 

இதுபோன்ற உத்தியை தான் நடந்து முடிந்து வெற்றி பெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில்  பயன்படுத்தினோம் அதே போல தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த உத்தியைப் பயன்படுத்தி 40 தொகுதிகளிலும்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற உள்ளோம்.

 

 

அதேபோல ஏப்ரல் 18ஆம் தேதி 18 எம்எல்ஏவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தமிழக முதல்வராக அம்மாவின் ஆட்சியை அமைக்க உள்ளோம்.  அதே போல புரட்சி தலைவி அம்மாவிற்கு துரோகம் செய்த இபிஎஸ், ஓபிஎஸ் பஞ்ச பரதேசி நாய்களும், அமைச்சர்கள் வீரமணி, வேலுமணி ஆகியோர் விரைவில் சிறை செல்ல உள்ளனர். அதற்காக ஜெயிலில் இடமும் தயார் நிலையில் உள்ளது என்று பேசினார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்