திருத்தணியில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு பேருந்து வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மாதனூர் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு இளைஞர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்து சிறிது தூரம் சென்ற போது நடத்துநர் அவர்களிடம் டிக்கெட் எடுக்கக் கேட்டுள்ளார்.
அப்போது, இருவரில் ஒருவர மது போதையில் இருந்ததால் நான் யார் தெரியுமா? விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் எனவும், என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா? மகளிருக்கு மட்டும் டிக்கெட் எடுக்கவில்லை. நாங்களும் டிக்கெட் எடுக்க மாட்டோம் உன்னைப் போல் ஆயிரம் பேரை நான் பார்த்துள்ளேன் உன்னால் என்னை இறக்கி விட முடியுமா ? எனக் கூறி போதை இளைஞர் பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அந்த போதை இளைஞர்கள் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மது போதையில் இருப்பதால் பேருந்து முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மற்றும் பேருந்து நடத்துநர் சேர்ந்து போதை இளைஞர்களை ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருவரையும் இறக்கிவிட்டு பேருந்து சென்றது. இது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.