








Published on 18/10/2023 | Edited on 18/10/2023
சென்னையில் தொழிலதிபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாயர் மேன்ஷன் வளாகத்தில் ஐந்தாவது மாடியில் இயங்கி வரும் kawman Exact என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை பில்டிங் ஆபீஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கட்டிடத்தில் 2ம் தளத்தில் ஸ்கோப் இன்கிரீடியன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மருந்து கம்பெனிகளில் சோதனை நடத்தினர். அதனால், அங்கு பாதுகாப்பு பணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது.