Skip to main content

ஹோட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு- மூன்று பேர் கவலைக்கிடம்!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

incident in thiruvannamalai

 

திருவண்ணாமலையில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், லட்சுமி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். கூலித் தொழிலாளியான இவர் அவரது பிள்ளைகள் லக்க்ஷனா, பிரியதர்ஷினி, கரண் என்ற நால்வர் மற்றும் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு, சீனிவாசன், யாகூப், திலகவதி. பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், பிரணவ், சந்தியா என மொத்தம் 12 பேரும் ஆரணி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி  சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டுக்கும் பொட்டலம் வாங்கிச் சென்று சாப்பிட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட அனைவருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், 12 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் மற்ற 9 பேர் ஆரணி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைபெற்று வந்த நிலையில், லக்ஷனா என்ற 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின்  தந்தை ஆனந்தன், பிரியதர்ஷினி, கரண் ஆகிய மூன்று பெரும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சென்னையில் காலாவதியான குளிர்பானத்தை வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்