புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி, அன்னவயல் கருங்கன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேரன். இவரது மனைவி மீனாம்பாள். எம்.பி.ஏ பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீனாம்பாள் புதுக்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணி செய்கிறார்.
இன்று மாலை ராஜசேகரும், மீனாம்பாளும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அன்னவயல் சென்று கொண்டிருந்தபோது புதுக்கோட்டை அசோக் நகர் அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை கடந்து செல்லும் போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாய, எதிரே வந்த லாரி மோதி மீனாம்பாள் மீது ஏறி இறங்கிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வங்கி பெண் ஊழியர் தன் கணவர் கண் முன்பே விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.