Skip to main content

அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

Increase in toll fees. how much? Effective from today..

 

 


தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது.

 

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்த நிலையில், தற்போது திருச்சி, திண்டுக்கல், திண்டிவனம் உள்ளிட்ட மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் முன்பிருந்த கட்டணத்தை விட 15% உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணம் 90 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களான பேருந்து, லாரி போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டணம் 310 ரூபாயில் இருந்து 355 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் 2,660 ரூபாயில் இருந்து 3,045 ரூபாயாக அதிகரித்துள்ளது. பேருந்திற்கான மாதாந்திர கட்டணம் 10,665 ரூபாயாக உயர்ந்துள்ளது. கனரக வாகனங்களுக்கு 17,140 என கட்டணம் உயர்ந்துள்ளது.  

 

விக்கிரவாண்டி - திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை, சமயநல்லூர், மனவாசி - திருச்சி - கரூர், மேட்டுப்பட்டி - சேலம் - உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி - புதுச்சேரி - திண்டிவனம், நத்தக்கரை - சேலம் - உளுந்தூர்பேட்டை, ஓமலூர் - நாமக்கல், தர்மபுரி - கிருஷ்ணகிரி - தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி - திருச்சி - திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம் - மதுரை - தூத்துக்குடி, சமயபுரம் - பாடலூர் - திருச்சி, செங்குறிச்சி - உளுந்தூர்பேட்டை- பாடலூர் போன்ற சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்