Skip to main content
Breaking News
Breaking

நகைக்காக குளத்தில் பெண் மூழ்கடித்துக் கொலை..  ராணுவ வீரர் கைது!                

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

incident in kanyakumari

 

தமிழகத்தில் வீடு, நகைக் கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகாித்து வரும் கொள்ளை சம்பவங்களுக்கு மத்தியில், பெண்களிடம் வழிப்பறி கொள்ளைகளும் அதிகாித்தே வருகின்றன. இந்த வழிப்பறி கொள்ளையையும் தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில்தான் வழிப்பறி கொள்ளையைத் தடுக்க முயன்ற பெண்ணைக் குளத்தில் தள்ளி கொலை செய்த சம்பவம் குமாி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

incident in kanyakumari

 

மேக்காமண்டபம் புனத்துவிளையைச் சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மனைவி மோி ஜெயா(44), முளகுமூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது நல்லபிள்ளை பெற்றான்குளத்தின் அருகில் மோி ஜெயா வரும்போது, அங்கு நின்றுகொண்டிருந்த முளகுமூடுவைச் சேர்ந்த ராணுவ வீரர் மெலின்ராஜ் (38) திடீரென மோி ஜெயாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகையைப் பறிக்க முயன்றுள்ளார்.

 

உடனே மோிஜெயா மெலின்ராஜின் கையைத் தட்டிவிட்டுக் கூச்சலிட்டு, அங்கிருந்து தப்பித்து செயினை மீட்கப் போராடினார். கூச்சல் சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்களும் ஓடி வர, அதற்குள் மெர்லின்ராஜ் மோி ஜெயாவின் வாயைப் பொத்தி குளத்துக்குள் தள்ளி மூழ்கடித்துள்ளான். இதில் மூச்சு திணறி மோி ஜெயா உயிாிழந்தார். பின்னர் அங்கு வந்த மக்கள் மெர்லின்ராஜை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

மெர்லின்ராஜ் போலீசிடம் இருந்து தப்பிக்க மோி ஜெயா குளத்தில் தற்கொலை செய்ய குதித்தபோது தான் காப்பாற்ற முயற்சித்ததாக பொய் சொல்ல, கடைசியில் போலீசாாின் கவனிப்பில் உண்மையை சொல்லியிருக்கிறார். இதேபோல்தான் வேர்கிளம்பியில் உள்ள ஒரு வீட்டில், தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றபோது அந்தப் பெண் சத்தம் போட்டு பொதுமக்கள் சூழ்ந்ததால், கடைசியில் போலீசாாிடம் அந்தப் பெண் என்னை உல்லாசத்துக்கு அழைத்ததாக பொய் சொல்ல, அப்போதும் போலீசின் கவனிப்பில் உண்மையைச் சொன்னான்.

 

மெர்லின்ராஜ் பணியில் இருந்து விடுமுறைக்கு வரும் போதெல்லாம் இப்படி வழிப்பறி, திருட்டு தொழிலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருப்பானாம் என போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்