![incident in chennai tenampet](http://image.nakkheeran.in/cdn/farfuture/br-5AsY_IlcATk1caJB-UwLrr6NQmn2-AeI_zLRXHnk/1602667355/sites/default/files/inline-images/bike_3.jpg)
சென்னை தேனாம்பேட்டையில் கஞ்சா விற்றதை போலீசுக்கு தகவல் சொன்ன நபரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை திரு.வி.க குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அசோக்குமார் வீட்டின் அருகே கஞ்சாவைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தட்டிக்கேட்ட அசோக்குமார், தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த அடையாளம் தெரியாத சிலர், நள்ளிரவில், வீட்டின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனம் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டுத் தப்பி ஓடினர். இதில் கதவு, ஜன்னல் சேதமடைந்தது.
மேலும் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 இரு சக்கர வாகனத்தையும் தீயிட்டுக் கொளுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.