![arjuna murthy](http://image.nakkheeran.in/cdn/farfuture/nurXytzo1Z-CfJh5KhUVv3nbr012yer3xldbNdrhDOA/1611820413/sites/default/files/inline-images/6588658.jpg)
ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்த சமயத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி அறிவிக்கப்படாத ரஜினிகாந்தின் கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தவர் அர்ஜுன மூர்த்தி. அதன்பின் ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் எடுத்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
நேற்று (27.01.2021) அர்ஜுன மூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், ‘ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும். மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என நம்புங்கள். ரஜினிகாந்த் எனது தலைவர் என்பதைவிட, நானும் ஒரு ரஜினி ரசிகர் என்பதில் பெருமைகொள்கிறேன். ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம்’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன மூர்த்தி, “புதிய சிந்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளேன். நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.