Skip to main content

"பேரறிவாளனிடம் ஃபோனில் பேசினேன்" - விஜய் சேதுபதி

Published on 10/09/2018 | Edited on 10/09/2018

 

 

sethu

 

27 வருடங்களாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிப்பதைப் பற்றிய முடிவை மாநில அரசே எடுத்துக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 06.09.2018 அன்று  தெரிவித்தது. அதைத் தொடர்ந்து நேற்று தமிழக அரசு ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது.


 

ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளுக்காக மகிழ்ச்சி கொள்வதாகவும் இந்தத் தீர்ப்பு என்பது மாநிலத்திற்கான உரிமை கிடைத்ததற்கு சமம் என்றும், இதனை பயன்படுத்தி நமது முதல்வர், ஆளுநரிடம் கோரிக்கை வைத்து அவர்கள் அனைவரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் சமீபத்தில் பரோலில் வெளிவந்திருந்த போது விஜய் சேதுபதி ஃபோன் மூலமாக அவருடன் பேசினாராம். பிறகு அவரின் தாய் அற்புதம்மாளிடமும் பேசினாராம். இறுதியாய் பேரறிவாளனிடம்  ஃபோன் தரும்போது அவரின் தாய் பேரறிவாளனை 'குட்டி' என்று அழைத்ததாகவும் அதனால் அற்புதம்மாளைப் பொறுத்தவரை இன்னும் பேரறிவாளன் குழந்தைதான் என்று அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார். ஒரு தாயிடமிருந்து குழந்தையை பிரித்து வைப்பது என்பது மிகப்பெரியப் பாவம், அது இவர்களின் வாழ்வில் இத்தனை வருடங்களாக நடந்துவிட்டது. அதனால், இது போதும். தமிழக அரசால் எவ்வளவு சீக்கிரம்  முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுதலையை குறித்து  முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தார். மேலும் பேரறிவாளன், விடுதலையான பின் அவரை நேரில் சந்திக்க ஆசை உள்ளதாகவும் தெரிவித்தார்.   

 

சார்ந்த செய்திகள்