![prabhu](http://image.nakkheeran.in/cdn/farfuture/toYmVT_Wm2L3LhfyV8du8ntFoUsl7SaLBVVE5botVbE/1533347670/sites/default/files/inline-images/prabu_0.jpg)
அதிமுக கட்சி பதவியிலிருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. வான பிரபுவை நீக்கம் செய்து ஈபிஎஸ் -ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., பிரபு பிப்ரவரி 23 தேதி சந்தித்த பிறகே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் தொடர்பாக பிரபுவிடம் கேட்டபோது, ’’அவர்கள் என்ன என்னை பொறுப்பில் இருந்து தூக்குவது? நானேதான் இவர்களின் தலைமை சரியில்லை என்று வெளியில் வந்து பிப்ரவரி 23 தேதி அண்ணன் டிடிவி அவர்களை சந்தித்து அவர் இயக்கத்தில் இணைந்தேன். இவர்கள் ரொம்பவே லேட்டு , இவர்கள் முடிந்தால் என்னை அதிமுக அடிப்படை உறுப்பினரில் இருந்து எடுக்கச் சொல்லுங்கப் பார்ப்போம்.
எங்கள் அம்மா இந்த கட்சியை வழிநடத்தும் போது சும்மா தலை நிமிர்ந்து இருந்தாங்க. ஆனால் இவர்கள் அந்த மரியாதையையும் கெடுத்துவிட்டார்கள். இதுதான் உண்மை . இவர்களிடம் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்யமுடியவில்லை. எனது சொந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்குக்கூட கட்சி நிர்வாகிகளே முட்டுக்கட்டை போடுகின்றனர். இவர்கள் மக்களுக்கு தேவையான சேவை செய்யவதற்காக இயங்கவில்லை. தனக்கு தேவையான ஆதாயத்திற்காக செயல்படுகிறார். இது போன்ற செயல்களை பார்த்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆழுமைத்திறன் இல்லை என்றும், மக்கள் சேவையைத் தொடர தமிழகத்தை வழிநடத்தும் தகுதியுள்ள டிடிவி தினகரன் வழியிலும் சேரலாம் என்றும் முடிவெடுத்தேன்.
அந்த இயக்கத்தில் எனக்கு 23 தேதி அன்றே விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கி இருக்கிறார்கள். எடப்பாடி மீண்டும் நான் அவர்கள் பக்கம் வந்துவிடுவேன் என்று நினைத்திருந்தார் . அதனாலதான் பதவியை நீக்கமால் இருந்தார் . அது நடக்காது என்ற போதுதான் இப்போது அவர் அம்மா வழங்கிய பாசறை ஒன்றிய செயலாளர் பதவியை தற்போது நீக்கியுள்ளார். இவர்கள் உண்மையிலே லேட்டு சார்.
18 எம்எல்ஏ தீர்ப்பு வரும் போது அவர்களுக்கு தெரியும். அதிமுகவில் அண்மைக்காலமாக ஓய்ந்திருந்த சலசலப்பு தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை ஓபிஎஸ் மறுத்தார். இதற்கிடையில் என்ன நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை !.
எனக்கு அம்மாவின் வழியியல் செயல்படும் அண்ணன் டி.டிவி் கொடுத்த பொறுப்பை நான் மிகுந்த சிறப்பாக செய்வேன். மீண்டும் நாங்க உண்மையான அதிமுக என்று நிரூபிப்போம் அப்போது தெரியும் என்னுடை கோபம்’’ என்றார்.