எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்கள்? என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞரின் 30வது நாள் நினைவு நாளையொட்டி மு.க.அழகிரி தலைமையில் சென்னையில் நாளை அமைதி பேரணி நடைபெற உள்ளது. இதற்காக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. இதற்காக மு.க.அழகிரி இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில் திமுக நிர்வாகி ரவி வரவேற்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைமை, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அவருடன் கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொள்ள கூடாது என்றும் கூறி உள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து மு.க.அழகிரி தனது டிவிட்டர் பதிவில்,
தலைவர் கலைஞர் அவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்துவது கட்சி விரோதச் செயலா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்பதையும் பார்ப்போமே! என அவர் தெரிவித்துள்ளார்.