Published on 07/01/2020 | Edited on 07/01/2020
![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/nQc07uU51HsSaa8GEmMs9nzyTMhylYVjcQWLeo9-RsM/1578379147/sites/default/files/inline-images/su_3.jpg)
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்துபோது பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் ஜெயகோபாலுக்கு நிபந்தனைகளின் பெயரில் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி தொடர்ந்த வழக்கில், ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.