Skip to main content

ஆணவக்கொலை விசாரணையில் உயர்நீதிமன்றம் அதிருப்தி!!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019



தமிழகத்தில் ஆணவக்கொலைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
 

ஆணவக்கொலைகளை தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது.


அப்போது, ஆணவக்கொலைகளை தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
 

High Court dissatisfied


இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவக்கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூகநலத்துறையின் கீழ் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல்நிலையங்களிலும் சிறப்பு பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.

ஆணவக்கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டு பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என குறைகூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்