Skip to main content

கனமழை எச்சரிக்கை... 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

 Heavy rain warning ... Holidays for schools in 26 districts!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (18.11.2021) தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாது புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

 

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்