Published on 08/08/2023 | Edited on 08/08/2023
![Heavy rain in Kanchipuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q5I_JbrdKhPGNikCmTOtJLEIXeUJvuAbBTeH9LaIVk8/1691499791/sites/default/files/inline-images/a987.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், சுங்குவார் சத்திரம், உத்திரமேரூர் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர், அழகர் கோவில், வல்லாளப்பட்டி, புலிப்பட்டி, மேலவளவு, கீழவளவு உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் நகர்ப் பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.