Published on 19/02/2018 | Edited on 19/02/2018
இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கு, சிறுமி ஹாசினி கொலை வழக்கு. பிப்ரவரி 2017ல் ஆரம்பித்த இந்த வழக்கிற்கு பிப்ரவரி 2018ல் தீர்ப்பு வந்துள்ளது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது என்ன?
- பிப்ரவரி 6, 2017 அன்று சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ஹாசினி காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.
- அதன்பின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீஸ் விசாரித்தபோது தஸ்வந்த் பிடிபட்டான்.
- சிறுமி ஹாசினியை தான்தான் கொலைசெய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஒப்புக்கொண்டான்.
- தஸ்வந்த் புழல் சிறையில் அடைப்பு
- குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்பதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தான்.
- 2017 டிசம்பர் 2 அன்று தனது தாய் சரளாவை பணம் கொடுக்கவில்லை என்பதற்காக கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றான்.
- மும்பையில் தார்டியோ என்னும் இடத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர். அங்கிருந்து தப்பியோட முயற்சித்தான்.
- தாயாரை கொன்ற குற்றத்திற்காக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.
- பிப்ரவரி 19 (இன்று) ஹாசினியை கொன்ற வழக்கில் தஸ்வந்திற்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனையும், சாகும்வரை தூக்கில் போடவும் தீர்ப்பளித்துள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றம்.