Published on 13/08/2018 | Edited on 13/08/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதிக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகள் செய்ய கடந்த 9ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததற்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு நாளை கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்.