வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் களத்தில் பணப்புழக்கம் அதிகம்மிருந்தது. திமுக வேட்பாளரின் ஆதரவாளர் இல்லம் மற்றும் குடோனில் 11.50 கோடி ரூபாய் பணம் மற்றும் வாக்குசாவடி எண்கள் அடங்கிய பட்டில் கைப்பற்றப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
சம்மந்தப்பட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு உடனே தேர்தலை நடத்த வேண்டும்மென அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரைப்போல் ஒரு சுயேட்சை வேட்பாளரும் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது.
வரும் மே 19ந் தேதியாவது தேர்தலை நடத்த வேண்டும்மென டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆணையாளர் சுனில் அரோராவிடம் மனு தந்துள்ளார் ஏ.சி.சண்முகம். ஏப்ரல் 25ந் தேதி மதியம் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தவர். தற்போது மனு தந்துள்ளேன், அரை மணி நேரத்தில் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது எனத்தெரிவித்தார்.
அரைமணி நேரம் என்பது அரைநாளை கடந்துவிட்டது. இந்த மனு தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையமோ, தேர்தல் ஆணைய வட்டாரம் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.